டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பணியிடங்கள், எண்ணிக்கை, தேர்வுத் தேதி, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விபரங்கள் அதில் வெளியாகும் என கூறப்பட்டது. குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரமாக உயரலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4-ல் 7,382 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி அளித்துள்ளார். தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இந்த முறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.