Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு… 5 மணி நேரம் தரிசனம் ரத்தானது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

திருப்பதி கோவிலில் ஆழ்வார்திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று சுமார் 5 மணிநேரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இந்த ஆழ்வார் திருமஞ்சனத்தில் மூலவருக்கு அலங்காரம் நடைபெற்று, பின் பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவையானது கோவிலை சுற்றிலும் தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம்  பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சுமாமியை வழிபட்டனர்.

Categories

Tech |