இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்னசாமி என்பவரது மகன்கள் ஜெயகாந்தன், ரகோத்தமன், மகள் வரலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமியின் கணவர் இறந்து விட்டதால் வரலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவ்வபோது வரலட்சுமி குறித்து தவறாக கூறி வந்துள்ளார்.
இதுகுறித்து வரலட்சுமியின் சகோதரர்கள் சக்திவேலிடம் தட்டி கேட்ட போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேல், ரகோத்தமன், ஜெயகாந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.