அரசு பேருந்துகள் மோதியதில் கண்ணாடிகள் உடைந்துவிட்டது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரண்டு அரசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சாரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக முன்னால் சென்ற பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடியும், பின்னால் வந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதமானது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் ஒரே பணிமனையை சேர்ந்தது என்பதால் ஓட்டுநர்கள் பேருந்துகளை அங்கிருந்து ஒட்டிக் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.