மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று (மார்ச் 30) ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. இது தவிர நிலுவையிலுள்ள 18 மாத DA பாக்கிகள் தொடர்பாகவும் அரசு முக்கியமான ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் மார்ச் மாதத்துக்கான ஊழியர்களின் சம்பளத்துடன் புதிய அகவிலைப்படி தொகையானது வரவு வைக்கப்படும்.
தற்போது அகவிலைப்படியில் மொத்தம் 3 சதவீதம் அதிகரிப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது வரையிலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 31 % அகவிலைப்படி பெறுகின்றனர். அந்த அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 34 சதவீதத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதனிடையில் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் டிசம்பர் 2021-ல் ஒரு புள்ளி குறைந்துள்ளது.
இதன் வாயிலாக அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33 என்ற அடிப்படையில் 34.04 சதவீதமாக இருக்கிறது. இதனால் மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தற்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022-ல் கணக்கிடப்படும். கடந்த டிசம்பர் 2021-க்கான AICPI-IW தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது.