கன்னி ராசி அன்பர்களே..!
தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்.
வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தக்கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பெரிய தொகையை எதற்கும் பயன்படுத்த வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடன்கள் வாங்க வேண்டாம். லாபம் கொஞ்சம் சுமாரான அளவில்தான் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பாக செல்ல வேண்டும். தலைவனை கட்டுப்படுத்த பாருங்கள்.
தேவையில்லாத பொருட்கள் மீது முதலீடுகள் செய்ய வேண்டாம். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பழைய வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். பொறுப்பை கையாண்டு காரியத்தை செய்து முடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.