பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகிவரும் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தின் முதல் பாகம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , சஞ்சு ஆகிய திரைப்படங்களில் அசத்தலாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அயன் முகர்ஜி இயக்கத்தில் 300 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் அமிதாப்பச்சன், ஆலியா பட், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2௦18ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிப்போனது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் தங்களது இணையதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆலியா பட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பண்டைய மற்றும் தற்போதைய மாடன் இந்தியா குறித்து படமாக்கப்பட்டுள்ளது. இதனிடையில் 2022ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘பிரம்மாஸ்திரா’.
இப்படத்தை Prime Focus, Dharma production, Star light pictures மற்றும் Fox star ஸ்டூடியோஸ் இவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்த நிலையில் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள நிலையில் தற்போது முதல் பாகத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.