Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக ஆடோவில்  ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணலை கடத்தி வந்த நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது காவல்துறையினரே பார்த்து 2  வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் பிரபகரன் பாபு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய 3 பேரையும்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |