மாற்றுத்திறனாளியை தாக்கிய விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கீழ தெருவில் மாற்றுத்திறனாளியான வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் வீரமணியின் உடல் குறைபாட்டை சுட்டிக் காட்டி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரமணி கேட்டபோது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் அவரது சகோதரர் மகேந்திரன் ஆகியோர் வீரமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.