சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ரஞ்சித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.