10ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் டொம்புச்சேரி பகுதியில் வசித்து வரும் விஜி என்ற வாலிபர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்து மாணவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவர் தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் அந்த வாலிபர் மீண்டும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் ஆத்திரமடைந்து அவர்கள் தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விஜி மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.