Categories
மாநில செய்திகள்

வேஷ்டியை மடித்துக்கட்டி….. தலைப்பாகையுடன் முதலவர்…. வெங்கையா பாராட்டு ..!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலைசெய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெற்பயிருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் வெங்கையா நாயுடு, “கடந்து வந்த பாதையை மறக்காத தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது மக்களை ஊக்கப்படுத்துகிறது. வேளாண்மையை லாபகரமானதாக மாற்ற, அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்” என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி பதிவிட்டுள்ள இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைராலாகப் பரவிவருகிறது.

Categories

Tech |