Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென நெல்சனுக்கு நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்…. காரணம் இதுதான்…. தீயாய் பரவும் ட்விட்….!!!

பீஸ்ட்  படம் குறித்து நெல்சன் போட்ட பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள். 

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார்.படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் பீம் திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் இணையதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நெல்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் “நாளை” என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சியில் சென்றுள்ளனர். எனவே நாளை பீஸ்ட் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |