Categories
மாநில செய்திகள்

தமிழ் புத்தாண்டிற்கு சிறப்பு ரயில்…. எந்தெந்த ஊருக்கெல்லாம் தெரியுமா?…. தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ் புத்தாண்திற்காக  தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கு வரும். இதனையடுத்து அதிகாலை 5.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் ரயில் இரவு 9 மணிக்கு மதுரையை வந்தடையும். அதன்பிறகு மதுரையிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்திற்கு செல்லும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில்வே நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலில் 1 குளிர்சாதன பெட்டி, 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 காப்பாளர் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |