தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார் என்று திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “என்னிடம் இரண்டு டப்பா, ஊரில் ஆடுகள், மாடுகள் மட்டுமே உள்ளது. திமுக எம்பி வில்சன் என்மீது ரூபாய் 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் பிஜிஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூபாய் 100 கோடி என மொத்தம் ரூ.610 கோடி கேட்டுள்ளனர். அதற்கு நான் ஒர்த் இல்லை. முடிந்தால் கைது செய்து பாருங்கள்” என்று கூறியுள்ளார்.