கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வரத்து அதிகரிப்பு சமாளிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகிறது.
அதனால் வழக்கம்போல போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்தடையும்.