டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி (காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை) நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாளாகும் . குரூப்-4 தேர்வில் 7,382 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில் குரூப்-4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்களில் குறைந்தது 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். அதாவது தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150+150 என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தமிழ்மொழி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும். தேர்வர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.