Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியா வீட்டை காலி பண்ணு” முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை கோவிலான்தோப்பு பகுதியில் முதியவரான  டேனியல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த தர்மகுமார்,அண்ணாதுரை, ஆகிய2 பேருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் டேனியல்தாஸின் வீட்டிற்கு வந்த தர்மகுமார் மற்றும் அண்ணாதுரை  வீட்டை காலி செய்யக்கோரி தகராறு செய்து டேனியல்தாஸை  சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த டேனியல்தாஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தர்மகுமார்,அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |