ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதை அருகே இன்று யாரும் செல்ல வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதையில் நாளை (மார்ச் 31) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி – ஆண்டிப்பட்டி இடையே ரயில்வே த சோதனை ஓட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மட்டும் ரயில் பாதை பகுதியில் வசிப்போர் யாரும் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.