Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ கடவுளே எனக்கு வலி தாங்க முடியல” கூலித்தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாபாலையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான உத்தண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உத்தண்டி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உத்தண்டியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உத்தண்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து உத்தண்டியின்  மகன் செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |