இங்கிலாந்தில் மாணவியை கத்தியால் குத்திய இந்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜு(2௦) . இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சோனா பிஜு படித்துக் கொண்டே பகுதிநேர ஊழியராக இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹோம் பகுதியில் உள்ள ஹைதராபாத் லாலா பிரியாணி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடைக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா(23) சென்றுள்ளார். அவருக்கான உணவு கொண்டு செல்லும் பணியில் சோனா ஈடுபட்டுள்ளார் .
இதற்கிடையில் திடீரென அந்த இளைஞர் சோனாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க சென்ற சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இளைஞரை கைது செய்து தேம்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்திற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மேலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிற நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் ஏதும் தெரிந்தால் காவல் துறையினரிடம் தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.