பிரதோஷத்தை முன்னிட்டு உலகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலக நாயகி சமேத உலகநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் உலக நாயகி சமேத உலகநாயகன் சுவாமிக்கு பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் வாகன உள் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.