Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகைக்காக இப்படியா பண்ணுவீங்க?…. பற்றி எரிந்த வீடு …. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் 26 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில்  விவசாயியான பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கோட்டூரில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதன் பின்னர் பூமிநாதன்  உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூமிநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டில் தீவைத்து கொளுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

Categories

Tech |