Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தூக்க நேர்ச்சை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற தூக்க நேர்ச்சை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே இட்டகவேலி பகுதியில் பிரசித்தி பெற்ற நீலகேசி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மியிரக்க திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் நேற்று தூக்க நேர்ச்சை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா குழந்தைகளின் நலனுக்காக செய்யப்படுகிறது.

இந்த திருவிழாவின் போது 2 வில்கள் கொண்ட தூக்க வண்டியில் 4 குழந்தைகளை கையில் ஏந்திய படி அம்மன் சன்னிதானத்தை சுற்றி வலம் வந்தனர். இதேப்போன்று 119 குழந்தைகளை தூக்கிக்கொண்டு வளம் வந்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |