Categories
உலக செய்திகள்

நாங்கள் எதிராளிகள் அல்ல நண்பர்கள்…. சீன வெளியுறவுத் துறை மந்திரி பகீரங்க பேச்சு….!!!

சீனாவும் இந்தியாவும் எதிராளிகள் அல்ல கூட்டாளிகள் என்று சீன வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு கடந்த 25ஆம் தேதி திடீர் பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவர் தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இந்தியப் பயணம் குறித்து சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில். “இரு நாடுகளுக்கும் இடையே அச்சுறுத்தல்கள் இல்லை என்பதை உறுதி செய்வது, உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, நடைமுறை சிக்கல்களை சரியாக தீர்ப்பது, கையாள்வது போன்றவற்றின் ஒரே மாதிரி கருத்தை கடைப்பிடிக்க இரு நாடுகளும் சமதித்து கொண்டுள்ளன. மேலும் சீனாவும், இந்தியாவும் எதிராளிகள் அல்ல கூட்டாளிகள். ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கு பதிலாக வெற்றி பெற உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |