தொழிற்சங்கங்களின் 2-வது நாள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் போது 100% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது என கூறிய அரசு ஊழியர்களும், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம். எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள் முடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35% பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதன் காரணமாக அரசுக்கு 25 லட்ச ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது 100% பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் நேற்று தொழிற்சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.