ராஜஸ்தான் மாநிலம் துசா மாவட்டதை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு வந்திருந்த நிலையில் பிரசவத்தின்போது அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் அந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் டாக்டர் அளித்த சிகிச்சையில் தவறு நடந்துள்ளது என்று எண்ணி ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டன.
பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் அர்ச்சனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மன உலைச்சலுக்குள்ளான டாக்டர் அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.