ஏணியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இளையநயினார்குளம் மேலத்தெருவில் எலக்ட்ரீசியனான பால்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டிற்கு சென்று 15 அடி உயரத்தில் இருக்கும் எரியாத மின்விளக்கை சரி செய்வதற்காக ஏணியில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பால்துரை ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து படுகாயமடைந்த பால்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.