டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4-ல் 7,382 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் எந்த துறைக்கு எத்தனை பணியிடங்கள் இருக்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
# கிராம நிர்வாக அலுவலர் (VAO)- 274
# இளநிலை உதவியாளர்- 3,681
# பில் கலெக்டர்- 88
# தட்டச்சர்- 2,108
# சுருக்கெழுத்து தட்டச்சர்- 1,024
# ஸ்டோர் கீப்பர்- 1
# வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர்- 163