Categories
உலக செய்திகள்

மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த குடும்பம்…. வெளியான தகவல்கள்…!!!

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பத்தினர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவத்தில் அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள Montreux என்ற நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த குடும்பத்தின் தலைவர் Eric David பிரான்ஸ் நாட்டின் Marseille என்ற நகரத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பிரபல பள்ளி மற்றும் தொழிற்கல்வியில் படித்திருக்கிறார். அவரின் மனைவி இரட்டையராக பிறந்தவர். இரட்டை சகோதரிகளில், David-ன் மனைவி, பல் மருத்துவராக இருக்கிறார்.

அவரின் சகோதரி கண் மருத்துவராக உள்ளார். இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு,  முன்பாக அந்த குடியிருப்பில் இருந்து சிறிய சத்தமும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.  அந்த வீட்டில் உள்ள இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு அனுப்பப்படாமல் வீட்டிலிருந்து பாடம் கற்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த குடும்பத்தில் 15 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |