பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த ஒரு முக்கிய தகவலை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் சில நாட்களாக கேட்டு வந்தனர்.
https://twitter.com/ShineTomChackoo/status/1508703041968820224
இதன்காரணமாக நெல்சன் ட்விட்டரில் நாளை என்று ஒரு பதிவை போஸ்ட் செய்திருந்தார். தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த டிம் சாக்கோ ட்விட்டரில் ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். அதாவது பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாக தயாராக இருக்கிறது. அதைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகுங்கள். இதுவரை நாம் பார்க்காத விஜய்யை பீஸ்ட் டீசரில் பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தார். இதன் மூலமாக பீஸ்ட் டீசர் விரைவில் வெளியாக போகிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.