அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1976 ல் ஓட்டுனருடன் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தி சென்று அவர்களை உயிருடன் புதைத்த ஒருவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடந்த 1976 இல் நியூ ஹால் வுட்ஸ் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டுநர் மற்றும் 26 குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்தை கடத்தியுள்ளார். அதன்பின்பு அந்த பேருந்துடன் 27 பேரையும் மொத்தமாக உயிருடன் தனக்கு சொந்தமான குவாரி ஒன்றில் புதைத்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகத்திடம் 5 மில்லியன் டாலர் தொகை கேட்டு மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனையடுத்து வுட்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து குவாரியில் புதைத்த 26 குழந்தைகளும், பேருந்தின் ஓட்டுநரும் 16 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு குழியில் இருந்து தப்பியுள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக வுட்ஸ்ஸும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு பரோலின்றி 27 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் 18 முறை முயன்று கடந்த வெள்ளிக்கிழமையன்று வுட்ஸ்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.