ஆங்கில பேராசிரியர் ஒருவர் வயது முதிர்ந்த காலத்திலும் ஆட்டோ ஓட்டி சுய சம்பாத்தியம் செய்து வருகிறார்.
சமூக ஊடகத்தில் நிக்கிதா என்ற பெண்மணி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் கர்நாடகாவில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக ஆட்டோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஆட்டோ ஓட்டி வந்த முதியவர் எங்கே செல்ல வேண்டும் என்று நிகிதாவிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். இதற்கு நிக்கிதாவும் தான் செல்லவேண்டிய இடத்தை குறிப்பிட்டு ஆட்டோவில் ஏறியுள்ளார். அவர் ஆட்டோவில் ஏறியபிறகு முதியவரிடம் நீங்கள் எப்படி இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு முதியவர் நான் மும்பையில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று கூறினார். அதன்பிறகு ஆட்டோ எதற்காக ஓட்டுகிறார்கள் என்று கேட்டதற்கு தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி நிகிதாவிடம் கூறியுள்ளார். இவருடைய பெயர் பட்டாபிராமன் என்றும் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருவதாகவும் கூறியுள்ளார். இவர் கர்நாடகாவில் இருக்கும் கல்லூரிக்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இவருடைய ஜாதியை காரணம் காட்டி வேலை தர மறுத்துள்ளனர். அதன்பிறகு மும்பையில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்த கல்லூரியில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதன்பிறகு அவர் யாரிடமும் கையேந்த விரும்பாமல் சுயமாக ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார். இதன்மூலமாக அவருக்கு நாளொன்றுக்கு 700 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து கொண்டு நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் எங்களுடைய வீட்டிற்கு வாடகைப் பணம் தருவார். அதற்கு மேல் நாங்கள் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் 74 வயதிலும் மனம் தளராமல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதுபோன்ற மறைந்திருக்கும் ஹீரோக்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.