Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி வெட்டிருக்க? தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வளசரவாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. இவர் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில்  வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறைக்காக  சீனிவாசன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். இந்நிலையில் முடிவெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்ற சீனிவாசன், முடியை முழுமையாக வெட்டாமல் ஸ்டைலாக வெட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோகனா,  முடிய ஏன் இப்படி வெட்டிருக்க? ஒழுங்கா வெட்டக்கூடாதா?, படிக்கிற பைய இப்படி வெட்டலாமா?” என மகனை கண்டித்தார்.

தனது தாய் திட்டியதால் மனம் உடைந்த சீனிவாசன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய மோகனா இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Categories

Tech |