கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் போரால் உலகநாடுகள் எதிர்கொள்ள உள்ள உணவு, எரிசக்தி தட்டுப்பாட்டை தீர்க்க உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரால், இரண்டு நாடுகளின் அடிப்படை வசதி, பொருளாதாரம் உணவுத் தேவை மட்டும் பாதிக்கப்படவில்லை. உலக நாடுகளிலும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இனி வரும் நாட்களில் உலக நாடுகள் எதிர்கொள்ள உள்ள உணவு, எரிசக்தி தட்டுப்பாட்டை தீர்ப்பதில் கனடா முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியிருக்கிறார்.