Categories
தேசிய செய்திகள்

“பூஸ்டர் டோஸ்”…. நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகுமா?…. வெளியான தகவல்…..!!!!!!

தற்போது இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து வாயிலாக பதில் அளித்தபோது, அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் கோவிஷீல்டு பூஸ்டர்டோஸ் தடுப்பூசிகள் குறித்த சர்வதேச தரவு, அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அளவுகளில் 3 -4 மடங்கு வரையிலும் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. கோவேக்சின் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அதில் பூஸ்டர் டோசுக்கு பின் சார்ஸ் கோவ்-2வுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து இருப்பதை காட்டுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசிகளை கலந்துபோடுவது குறித்து ஒரு கேள்விக்கும் பாரதி பிரவிண் பவார் எழுத்து வாயிலாக பதில் அளித்தார். அதாவது, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை கலந்துபோடுவது தொடர்பாக (முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்தி விட்டு கோவேக்சினை 2-வது டோஸாக செலுத்த (அல்லது) முதல் டோஸ் கோவேக்சின் செலுத்திவிட்டு விட்டு கோவிஷீல்டை 2-வது டோஸாக செலுத்த) 4ஆம் கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் கோவேக்சின் தடுப்பூசியை பிபிவி 154 தடுப்பூசியுடன் ஒப்பிட்டு நோய் எதிர்ப்புச்சக்தி, பாதுகாப்பை ஆய்வு மேற்கொள்ளும் 2-வது கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை கலந்துபோடுவது குறித்து தேசிய தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்வதற்கு போதுமான அறிவியல் தரவு தேவைப்படுகிறது. இப்போது இது கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |