தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.