ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டகளில் முதல் 3 நாட்களில் நடந்த போட்டியில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஆடிய ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும், படிக்கல் 29 பந்தில் 41 ரன்னும், கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்தில் 55 ரன்னும் எடுத்தனர். ஷெப்பர்டு, புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட்டு எடுத்தும், உம்ரான் மாலிக், நடராஜன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றியை கைப்பற்றினார்கள்.
இரண்டாவதாக ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 40 ரன்னும், மார்க்ராம் அதிகபட்சமாக 41 பந்தில் 57 ரன்னும் எடுத்தும் போல்ட், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும், யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகள் எடுத்தும் ஆட்டத்தை வீழ்த்தினார்கள். இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்று ஆட்டத்தை வென்றனர். இது குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் கூறியுள்ளதாவது, நாங்கள் நினைத்ததை விட இந்த ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பிச்சுக்கு ஏற்ற வகையில் வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். நீண்ட கால இலக்கு எதுவும் இல்லை.
இயன்ற அளவுக்கு அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அணியின் உரிமையாளர்கள் எங்களை நம்புகிறார்கள். நாங்களும் அதற்கு ஏற்ற வகையில் திறமையை வெளிப்படுத்துவோம் என்று கூறினார். இதையடுத்து தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “தொடக்கத்தில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். கடைசியில் ரன்களை கொடுத்து நெருக்கடிக்கு ஆளானோம். பேட்டிங்கில் நாங்கள் கற்க வேண்டி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டனர்” என்றார். இந்நிலையில் வருகிற 2 ஆம் தேதி இரண்டாவது ஆட்டமாக ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் நான்காம் தேதி ஹைதராபாத் அணி லக்னோவை எதிர்த்து போட்டியிட உள்ளது.