Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவி…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசினார். அதாவது, அரசு கல்லார் தோட்டக்கலை பண்ணையில் தேனி பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதற்காக 100 தேனீ வளர்க்கும் பெட்டிகள் வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன தெளிப்பு நீர் கருவிகள் வழங்கப்பட இருக்கிறது.

இதனையடுத்து உரம் தட்டுப்பாடு குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து போதிய உரம் வந்த பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்படும். தினமும் உரம் இருப்பு அறிக்கை குறித்த விவரங்கள் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்திய அரசு தேயிலை சட்டங்களை மாற்ற இருப்பதால் அனைத்து தேயிலை சங்கங்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. காட்டுயானை வழித்தடங்களில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு மும்முனை மின் இணைப்பு பெற வழிவகை செய்யப்படும். பயிர் இழப்பீடு தொகையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.

Categories

Tech |