தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் தொழிலாளியான செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணிடம் அதே பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செலவினை சரத் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.