வாலிபர் தனது உறவினரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான தங்கராஜ் என்பவருடன் இணைந்து ஆலங்குளத்தில் இருக்கும் தொட்டியான்குளத்தில் பன்றிகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் பீர் பாட்டிலை உடைத்து கண்ணனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த கண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.