நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் அருகே இருக்கும் காசிமேஜர் புரத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கனகராஜ், சிலம்பரசன், அருண் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.