கிணற்றில் வாலிபர் சடலம் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே குளத்தூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பகண்டை கூட்ரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் வடை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரகலாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.