Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜபேதார்மேடு பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |