Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க வந்த இடத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

திருமணம் முடிந்து 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரிகள்பாளையம் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். இவருக்கும் இருகாலூர் பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து கண்டக்டரான ராமமூர்த்தி என்பவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூகலூர் அம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதி இருவரும் திருமணத்திற்கு பின் இருகாலூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரம்யா தனது கணவரிடம் தந்தையை பார்த்து வருகிறேன் எனக் கூறிவிட்டு குமரிகள்பாளையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு ரம்யா வீட்டில் எலிக்கு பயன்படுத்தும் எலி பேஸ்ட்டை தின்று  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ரம்யாவை உடனடியாக மீட்டு குன்னத்தூர் தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குன்னத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |