தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதனால் மக்களும் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதால் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். நகை கடன் தள்ளுபடி வழங்கும் பணி முடிந்ததும் உண்மையாகவே மகளிர் குழுக்கள் செயல்படுகிறதா என ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தணிக்கை துறை ஆய்வுக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.