சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் செலவு மதிப்பீடு ரூ.2,438 கோடியாகவும், வருவாய் ரூ.2,084 கோடியாகவும் இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி பற்றாக்குறை அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாலை மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றில் தரமான பணிகளை மேற்கொண்டு செலவை மிச்சப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.