Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்யின் பீஸ்ட்… “டீசரில் அது இல்ல”… வெளியான தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் டீசரில் வசனம் இருக்காது என செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் பல நாள் காத்திருந்த நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் நெல்சன் நேத்து ஒரு நல்ல செய்தியைக் கூறினார். அவர் நாளை என்று டிவிட் போட்டது ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் டாம் சாக்கோ ஒரு பதிவை பகிர்ந்துள்ளதில் கூறியுள்ளதாவது, விரைவில் பீஸ்ட் படத்தின் டீஸர் வெளியாகும். ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்கள் என கூறியது ரசிகர்களிடையே பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என கணித்துள்ள நிலையில் தற்போது மற்றொரு செய்தி இணையத்தில் உலாவி வருகின்றது. அது என்னவென்றால் ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு ஃபேஸ்ட் படத்தின் டீசர் வெளியாக இருக்கின்றதாம்.

Categories

Tech |