Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. பிஎம் கிசான் நிதியுதவி பெற…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் கணக்கிற்கு 2,000 வீதம் ஒரு ஆண்டில் மட்டுமே 6 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை ஏப்ரல் 2022 ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  இந்த பிஎம் கிசான் நிதியுதவி பெரும் விவசாயிகள் eKYC செயல்முறையை கட்டாயம் முடிக்க வேண்டும். இல்லையென்றால் 4 மாதத்திற்கு ஒருமுறை பெறப்படும் நிதியுதவியில் சிக்கல் ஏற்பட்டுவிடும். முன்பே eKYC செயல்முறையை முடிக்கும்படி மார்ச் 31 (இன்று) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்து PM-KISAN பயனாளிகளுக்கும் eKYC-ன் செயல்முறையை முடிக்ககோரி மே 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது eKYC செயல்முறையை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலாவதாக PM கிசானின் அதிகாரபூர்வமான https://pmkisan.gov.in/ இணையதளம் முகவரிக்கு சென்று முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்திலுள்ள eKYC விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து தேடலை கிளிக் செய்யவும். அதன்பின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவு செய்து, அந்த எண்ணிற்கு OTP வந்ததும் அதனையும் பதிவு செய்ய வேண்டும். eKYC வெற்றிகரமாக இணைக்க அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். இல்லையெனில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆதார் அட்டையை காண்பித்து eKYC செயல்முறையை செய்து கொள்ளலாம்.

Categories

Tech |