Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு…. ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?…. இதோ முழு விபரம்….!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் சென்ற 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சீரடைந்து இருப்பதால் அதிகப்படியான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்சம் கல்வி தகுதி 10ம் வகுப்பு ஆகும். ஆகவே தகுதியானவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல்முறை என முழு விபரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குரூப் 4 காலிப்பணியிடங்கள்

# Village Administrative Officer (VAO) Office

# Junior Assistant (Non–Security)

# Junior Assistant (Security)

# Bill Collector Grade-I (Post Code:)

# Field Surveyor

# Draftsman

# Typist

# Steno-Typist (Grade–III) என்று மொத்தம் 7,382 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா வாயிலாக நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 வயது வரம்பு

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருப்பவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். அத்துடன் வயது தளர்வு குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி

# விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் உயர்நிலைப் படிப்புகளில் சேர்க்கை வழங்கக்கூடிய குறைந்தபட்சம் மதிப்பெண்களுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

# தட்டச்சர் மற்றும் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு எழுதுவதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தகுதி பெற்றிருக்கவும்.

# ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு – III) பதவிக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

# விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை

விண்ணப்பதார்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எழுத்து தேர்வுகள் ஜூலை 24-ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதன்பின் இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam Pattern-தேர்வு மாதிரி

இந்த குரூப்- 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதற்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 300 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுவதும் தமிழில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 விண்ணப்பக் கட்டணம்

ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). இதில் முன்பே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை.

#தேர்வுக் கட்டணம் ரூபாய் 100

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in எனும் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு மார்ச் 30 (இன்று) முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எவ்வாறு..?

# டிஎன்பிஎஸ்சி குரூப்-4 VAO  தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில்
https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற தளத்தில் அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்யவும்.

# இதையடுத்து விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

# பின்தோன்றும் பக்கத்தில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது, கடைசி தேதி என்ன என்பது போன்ற விபரங்களும் இருக்கும்.

# அதற்கு அருகில் அப்ளை நவ் என்பதனை கிளிக் செய்த பின், நீங்கள் முன்பே பதிவு செய்திருந்தவர் என்றால் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். இதுவரையிலும் பதிவு செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. முதல் பக்கத்துக்குச் சென்று நிரந்தரப்பதிவு விபரங்கள் என்பதை கிளிக் செய்யவும்.

# அதன்பின் தோன்றும் திரையில் புதிய பதிவு விழைவோர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். இவற்றிற்கு உங்கள் அடிப்படை விபரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.

# பதிவு செய்தபின் அப்ளை செய்ய வேண்டிய பக்கத்துக்கு வந்து உங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யுங்கள்.

#  உள் நுழைந்ததும் உங்களுக்கு காட்டப்படும் பக்கத்தில் குரூப்-4க்கு விண்ணப்பிக்க இங்கேகிளிக் செய்யவும் என கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

# அங்கே விண்ணப்ப விபரங்கள் எனும் பிரிவு இருக்கும். அவற்றில் மொத்தம் 10 படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். விண்ணப்ப விபரங்கள், தகவல் தொடர்பு விபரங்கள், கல்வித் தகுதி விபரங்கள் ஆகிய விபரங்களை நீங்கள் உள்ளீடு செய்யவும்.

# முடிவில் அனைத்து படிநிலைகளையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். அதனை பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ வைத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |